விருதுநகர் : காரியாபட்டியில், தீயணைப்பு நிலைய அலுவலர் பணிநிறைவு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, தீயணைப்பு, நிலைய அலுவலராக பணியாற்றிய, திரு. கோபால்சாமி, பணி ஓய்வுபெற்றார் .
இதற்காக தீயணைப்பு வீரர்கள், ஏற்பாடு செய்த பிரிவுபசார விழாவுக்கு, மாவட்ட தீயணைப்பு, நிலைய அலுவலர் திரு.கணேசன், தலைமை வகித்தார்.
பேருராட்சி சேர்மன், திரு. செந்தில், முன்னிலை வகித்தார். விழாவில் , எஸ்.பி.எம்.டிரஸ்ட் நிறுவனர், திரு. அழகர்சாமி, வழக்கறிஞர் திரு.செந்தில்குமார், மற்றும் பொதுநல அமைப்பு பிரதிநிதிகள், தீயணைப்பு வீரர்கள், சர்வகட்சி பிரமுகர்கள், ஓய்வுபெறும், தீயனைப்பு நிலைய அலுவலர், திரு. கோபால்சாமியை, பாராட்டி , பேசினார்கள். தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால்சாமி, ஏற்புரை வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி