விருதுநகர்: திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் 123வது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சிநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளிச் செயலாளர் பெரியணராஜன் தலைமை வகித்தார். ஆரம்பப் பள்ளிச் செயலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் செல்வராஜ் வரவேற்றார். விழாவில், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி , பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், நடனம், பாடல், சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி