கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேன்மொழி என்பவர் தேன்கனிக்கோட்டை அரசு மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருவதாகவும் (14.09.2025) ஆம் தேதி காலை சுமார் 07.30 மணியளவில் அய்யூர் ரோடு ஹோலிகிராஸ் எஸ்டேட்டில் இருந்து அரிஷ் என்பவரும், தேன்கனிக்கோட்டை பண்டேஸ்வரம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அய்யூர் ரோடு ஹோலிகிராஸ் எஸ்டேட்டில், அடைகலாபுரம் கிராமத்தில் மல்லிகை பார்ம் ஹவுஸ் அருகில் உள்ள பண்டேஸ்வரம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள மூன்று மின்மாற்றிகளை உடைத்து காப்பர் காயில் திருடி சென்று விட்டதாக கூறிய தகவல் தெரிவித்ததன் பேரில் அலுவலகத்தில் இருந்து இரண்டு நபர்களை அனுப்பி நேரில் சென்று ஆய்வு செய்த போது மூன்று மின்மாற்றிகளை உடைத்து கீழே தள்ளி அதில் இருந்த ஆயிலை கீழே ஊற்றிவிட்டு மின்மாற்றிகளில் இருந்த சுமார் 60 கிலோ காப்பர் காயில்களை திருடி சென்றது தெரியவந்தது திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேன்மொழி அவர்கள் (01.10.2025) ஆம் தேதி தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து காப்பர் காயில்களை திருடிய ஐந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து காப்பர் காயில்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.