கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஸ்லாம்பூர் கிராமத்தில் உள்ள மணம் புரூட்ஸ் கம்பெனியில் பிரவீன் குமார் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதாகவும் (07.05.2025) ஆம் தேதி மதியம் சுமார் 1.00 மணியளவில் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் ராமமூர்த்தி என்பவர் பிரவீன் குமாருக்கு போன் செய்து கம்பெனியில் மோட்டாரில் உள்ள காப்பர் ஒயரை சுற்றி எடுத்துக் கொண்டு ஓடிய நபரை பார்த்து சத்தம் போடவே அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்து வைத்துள்ளதாக தகவல் கூறவே பிரவீன் குமார் கம்பெனிக்கு வந்து பார்த்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காப்பர் ஒயரை திருடிய நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பிரவீன் குமார் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் காப்பர் ஒயரை திருடிய நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்து சிறையில் அடைத்தனர்.