கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சமங்கலம் கூட்ரோடு அருகில் உள்ள ரன்வா கிரானைட் கம்பெனியில் சித்தர்மல் என்பவர் மேனேஜராக வேலை செய்து வருவதாகவும், (03.02.2025)ஆம் தேதி 02.00 மணியளவில் கட்டுமான பகுதி அருகே கம்பெனிக்கு சொந்தமான காப்பர் ஒயரை திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை பிடித்து சோதனை செய்தபோது சுமார் 80மீட்டர் காப்பர் ஒயர் இருந்தது. கந்திகுப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காப்பர் ஒயரை திருடிய நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். சித்தர்மல் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் காப்பர் ஓயரை திருடிய நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.