திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் G.S.அனிதா,(தலைமையிடம்) மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் மாநகரம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் (17-10-2024)ஆம் தேதியன்று, சந்திப்பு பாபுஜி நகரில் உள்ள குழந்தைகள் காப்பகம், மற்றும் பெருமாள்புரம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு, சிறுவர் உதவி காவல் பிரிவு காவல் ஆய்வாளர், கோமதி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர், உமா மகேஸ்வரி காவல் உதவி ஆய்வாளர்கள் கருப்பசாமி, சந்திரா ஆகியோர் கலந்துகொண்டு பெண்குழந்தை எதிரான பாலியல் ரீதியான புகார்களை உடனடியாக தெரிவிக்க வேண்டிய (உதவி எண் 1098,181) வழிமுறைகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து 150 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு அறிவுரை வழங்கினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்