திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை சாந்தி நகர் 18-வது தெருவை சேர்ந்த ஜெனிபர் சரோஜா(23). என்ற இளம் பெண்ணிற்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் விஜயகுமார் (24). என்பவருக்கும் முகநூல் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை கண்டித்த ஜெனிபர் சரோஜாவின் சகோதரரான சிம்சன் புஷ்பராஜ்(25). மற்றும் அவரது நண்பரான இந்திரா நகரை சேர்ந்த பரமசிவன் என்ற சிவா(35). ஆகிய இருவரும் விஜயகுமாரை திருநெல்வேலிக்கு (02.12.2024) அன்று வரவழைத்து, வீட்டின் மாடியில் வைத்து கொலை செய்துவிட்டு விஜயகுமாருடன் வந்த அவரது நண்பர் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்(24). என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்