திருவள்ளூர் : மார்ச் 15-ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 2023-ம் ஆண்டு கைபேசிகள் காணாமல் போனது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் பெற்ற புகார் மனுவின் மீது மனு ரசீது அளித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்களின் மூலம் கைப்பேசிகளை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு வரப்பட்ட பரிந்துரை கடிதத்தினை பெற்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி இணையவழி குற்றபிரிவு காவல் நிலையத்தின் மூலம் சுமார் ரூபாய் ரூ23,10,000/- மதிப்புள்ள 154 கைபேசிகளில் தமிழ்நாட்டில் 127-ம், ஆந்திர மாநிலத்தில் 15-ம், கேரள மாநிலத்தில் 8-ம், கர்நாடக மாநிலத்தில் 4-ம், பயன்பாட்டில் இருந்து வந்ததை IMEI எண்கள் மூலமாக கண்டறிந்து மீட்கப்பட்டு அனைவரின் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டு கைபேசி ரசீது நகல்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்த்து உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நேரடியாக வழங்கப்பட்டது.