கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில்¸ பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்டு கொடுக்கும் படி பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தனர். பொதுமக்களின் புகார்களை விரைந்து முடிக்க துரிதமாக செயல்பட்ட சைபர் க்ரைம் போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் சுமார் 14 லட்சம் மதிப்புள்ள 115 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்கள். பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.