கடலூர்: பண்ருட்டி காவல் நிலைய சரகம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த (9). வயது சிறுவன் காணாமல்போன வழக்கில் பல இடங்களிலும் நேரில் தேடியும், CCTV கேமராவை ஆய்வு மேற்கொண்டும் புலன் எதுவும் கிடைக்காத நிலையில், காவல்துறை மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவைக்கப்பட்டது. காணாமல் போன சிறுவனின் பள்ளிபை மற்றும் உடைகளை மோப்ப நாய்கள் மோப்பம் பிடித்து 2 கி.மீ ஓடி சென்று ஏரிக்கரையில் நின்று குரைத்தது. ஏரியில் இறங்கி தேடியபோது சிறுவனின் பிரேதம் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்கள் இவ்வழக்கில் புலன் விசாரணைக்கு உறுதுணையாக இருந்த மோப்ப நாய்களுக்கு பிடித்த பிஸ்கட் கொடுத்து மகிழ்வித்து பாராட்டினார்.