திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டு வெடிகுண்டுகளை வைத்து இரண்டு காட்டு பன்றிகளை வேட்டையாடிய வீரலப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்து விஜயன் மற்றும் அம்பிளிக்கை பகுதியை சேர்ந்த செல்வராஜ் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது பிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி வனதுறையினரை கண்டு தப்பி ஓடிய வீரலப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரையும் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















