திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தபோது, ஜீப்பில் நாட்டு துப்பாக்கி, காட்டு கோழி உடல், 4 கத்திகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சந்திரன்(44). கருணாகரன் (40). பாலசுப்பிரமணி (43). என்பதும், காட்டு கோழியை வேட்டையாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா