திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி மலை சாலை பகுதியில் மேல்பள்ளம் என்னும் இடத்தில் திடீரென வனப்பகுதியில் பற்றிய காட்டு தீயினால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் தீயானது மளமளவென வனப்பகுதியில் பரவ தொடங்கியது. இச்சம்பவம் குறித்து அவனச்சரகர் குமரேசன் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வனத்துறையினர் திணறினர். இதையடுத்து தீ பிடித்து எரியும் பகுதிக்கு, எதிர் திசையில் இருந்து தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர். தீத்தடுப்பு கோடு என்பது, வனப்பகுதியில் சுமார் 20 அடி அகலத்துக்கு பள்ளங்கள் வெட்டப்பட்டு மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் செய்வதாகும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா