காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம், மாகரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கச்சேரியில் உள்ள செய்யாறு ஆற்றுப்பாலம் மழையால் முழுவதுமாக சேதமைந்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் அறிவுரையின்படி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மாற்று பாதையில் செல்ல வேண்டி காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைத்து 24 மணி நேரமும் பாதுகாப்பிற்காக காவலர்கள் பணியமர்த்தப்பட்டு அங்கு வரும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
அதிக கன மழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகமாக வருவதாலும் பொதுமக்கள் யாரும் (குளிக்கவோ துணிதுவைக்கவோ மீன் பிடிக்கவோ கூடாது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை மூலம் நீர் நிலைகள் அருகில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் நீர்நிலைகள் அருகில் ஆபத்தான முறையில் செல்ஃபி (selfie) எடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்