காஞ்சிபுரம் : இந்த நிலையில் காஞ்சிபுரம், காவல் துறை சரகத்தில் காஞ்சீபுரத்தில், 30 ஏட்டுகள், செங்கல்பட்டில் 32 ஏட்டுகள், திருவள்ளூரில் 31, ஏட்டுகள் என காவல் துறையினர், கடந்த 25 வருடங்களாக, பணிபுரிந்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக, ஏட்டுகளாக பணி புரிந்தவர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த, 29 பேர், செங்கல்பட்டில் 28 பேர், திருவள்ளூரில் 27 பேர், என 84 ஏட்டுகள் சிறப்பு காவல் ஆய்வாளராக , பதவி உயர்வு அளித்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. திருமதி. எம்.சத்யபிரியா, உத்தரவிட்டுள்ளார். விடுபட்ட , 9 ஏட்டுகளுக்கும் பதவி உயர்வு, புகார் நிறைவு பெற்றதும், பதவி உயர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்