திருப்பூர்: திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திரு.மணி அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அவரது மனைவி திருமதி கலா அவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 3லட்சம் வழங்க உத்தரவிட்டது. இந்த காசோலையை மாநகர காவல் ஆணையர் உயர்திரு.வனிதா (இ கா ப) அவர்கள் மறைந்த மணி உதவி ஆய்வாளரின் மனைவி கலாவிடம் மூன்று லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள். காவல் ஆணையர்உயர்திரு.சுந்தரவடிவேல் (போக்குவரத்து மற்றும் குற்றம்) உடன் இருந்தார்கள்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்