இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவலர்களின் ஒழுக்கம், அணிவகுப்பு நடைமுறை மற்றும் பயிற்சி தரம் குறித்து அவர் பாராட்டுக்களை தெரிவித்தார். தொடர்ந்து, பயிற்சியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் நேரடியாக உரையாடி, அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார். காவலர்களால் முன்வைக்கப்பட்ட குறைகளை உரிய முறையில் பரிசீலித்து, அவற்றை விரைவில் நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வின் போது ஆயுதப்படை உயரதிகாரிகள் மற்றும் காவலர்கள் பலர் உடனிருந்தனர்.
















