திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 197 பயிற்சி காவலர்களின் பயிற்சி நிறைவு விழா (19.10.2022), நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு.பிராஜ் கிஷோர் ரவி, இ.கா.ப., அவர்கள், காவல்துறை தலைமை இயக்குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், சென்னை அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சிறப்புரையாற்றி, சட்ட வகுப்பு தேர்வு , கவாத்து பயிற்சி தேர்வு, துப்பாக்கி சூடு பயிற்சி மற்றும் அனைத்து தேர்வுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பயிற்சி காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களும் உடன் இருந்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா