திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலு ரத்தப்பரிசோதனை நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் கடந்த (18.03.2023) ம் தேதி இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 92 பழைய செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப்பை திருடி சென்றனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் உட்கோட்ட தனிப்படையினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது மஸ்தான் (19), முகமது இஸ்ரிஸ் (19), சேக் பரீத் (20), அஸ்கர் முஜீப் (22) ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது, இதனையடுத்து நான்கு நபர்களையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த (03.03.2023) ம்தேதி திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சரகம் பழனி ரோட்டில் LLR காம்ப்ளக்ஸில் உள்ள ஸ்டுடியோவில் நுழைந்து இரண்டு கேமராக்கள் மற்றும் லேப்டாப் Hard Disk யையும், இதேபோல் கடந்த (18.03.2023), ம் தேதி திண்டுக்கல் நகர் வடக்கு காவல் சரகம் சௌடாம்பியம்மன் கோவில் சந்தில் உள்ள கூகுள் 2.0 என்ற ஜவுளி கடையில் 30 டீசர்ட்களையும் திருடி உள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருடப்பட்ட அனைத்து பொருட்களும் மேற்படி நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நான்கு குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா