மதுரை : மதுரை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் (8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள்) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த பொது ஏலம் வருகின்ற (18.11.2025)-ம் தேதி காலை 10.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது. ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் வருகின்ற (15.11.2025)-ம் தேதி காலை 10.00 மணி முதல் (17.11.2025)-ம் தேதி மாலை 05.00 மணி வரை மதுரை மாவட்ட ஆயுதபடை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம். மேலும், மேற்படி பொது ஏலத்தில் பங்கேற்கும் நபர்கள் ஏலம் நடைபெறும் நாளான (18.11.2025) அன்று காலை 08.00 மணி முதல் 10.00 மணிக்குள் தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய். 5,000/- (ஐந்தாயிரம் மட்டும்) முன் பணம் செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
மேலும் GST (சரக்கு மற்றும் சேவை) கணக்கு எண் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய 18% GST (சரக்கு மற்றும் சேவை வரி) உட்படி முழுத்தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுச் செல்ல வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















