மதுரை: வரும் மே (10- 05- 2025)-ஆம் தேதி நடைபெறும் கள்ளழகர் புறப்பாடு நிகழ்வை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பத்திரமாகவும் சீராகவும் போக்குவரத்து நடைபெறும் வகையில் சில வழித்தடங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
*போக்குவரத்து மாற்றங்கள்:
1. மதுரை–அழகர்கோவில் சாலை வழியாக மதுரையிலிருந்து மேலூர் செல்லும் அனைத்து வாகனங்களும், கள்ளந்திரி, லட்சுமிபுரம், மாங்குளம், கிடாரிபட்டி வழியாக செல்ல வேண்டும்.
2. மேலூரில் இருந்து அழகர்கோவில் சாலை வழியாக மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள், மரக்காயர்புரம் சந்திப்பு–மரக்காயர்புரம்–நாயக்கன்பட்டி வழியாக செல்ல வேண்டும். வாகன நிறுத்தும் இடங்கள் (மதுரை வழித்தடம்):
1. அம்புவிடும் மண்டபம் – இருசக்கர வாகனங்கள்.
2. பாலாஜி அவன்யூ – தற்காலிக பேருந்து மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்.
3. கேரளா நீட் அகாடமி – நான்கு சக்கர வாகனங்கள்.
4. மாங்காய் தோட்டம் – டாடா ஏஸ் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனங்கள்.
5. மா. சத்திரப்பட்டி சந்திப்பு – காயில் கம்பெனி – நான்கு சக்கர வாகனங்கள்.
6. பொய்கைகரைப்பட்டி தெப்பம் – இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்.
*வாகன நிறுத்தும் இடங்கள் (மேலூர் வழித்தடம்):
1. ஐஸ்வர்யா கார்டன் – நான்கு சக்கர வாகனங்கள்
2. முத்துலெட்சுமி ரைஸ்மில் பார்க்கிங் – இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்
3. பிரகாஷ் அய்யர் கார்டன் (மகாத்மா மாண்டிசோரி பள்ளி சந்திப்பு) – இருசக்கர வாகனங்கள்
4. அம்மன் மகால் அருகே – இருசக்கர வாகனங்கள்
5. கோட்டை இரண்டாவது நுழைவு வாயில் – தற்காலிக பேருந்து நிறுத்தம்
*பேருந்துகளுக்கான அறிவிப்பு:
மேலூரிலிருந்து அழகர்கோவிலுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மே 10 அன்று பிற்பகல் 1.00 மணி வரை அழகர்கோவில் வளாகம் வரை செல்ல அனுமதிக்கப்படும்.
*கனரக வாகனங்களுக்கு தடையாணை:
கீழ்க்கண்ட வழித்தடங்களில் காலை முதல் எந்தவொரு கனரக வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படாது:
• மதுரையிலிருந்து கடச்சனேந்தல் வழியாக அழகர்கோவில் செல்லும் சாலை
• மேலூரிலிருந்து கிடாரிப்பட்டி வழியாக அழகர்கோவில் செல்லும் சாலை
• மதுரை–நத்தம் சாலையிலிருந்து சீகுபட்டி சந்திப்பு வழியாக அழகர்கோவில் செல்லும் சாலை பொதுமக்கள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு, தேவையான திட்டமிடலுடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்