கடலூர்: குள்ளஞ்சாவடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணன்பாளையம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவரது கரும்பு வயலில் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்த குற்றவாளிகளை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாராயம் காய்ச்சிய சம்பவ இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு குற்றவாளிக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
















