திருச்சி: திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 680 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.25,580 ரொக்கப் பணம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















