திருச்சி: திருச்சி மாவட்டம், வையம்பட்டி மற்றும் புத்தாநத்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 62 மதுபாட்டில்கள் (30 + 32) பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















