சேலம் : சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (29), மணியனூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (36), இவர்கள் இருவரும் ரேஷன் அரிசி கடத்தியதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரால், ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், அவர்களை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி துணை காவல் சூப்பிரண்டு திரு. விஜயகுமார், காவல் ஆய்வாளர் திருமதி. மலர்விழி, ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். கலெக்டர் உத்தரவு இதை பரிசீலித்து சரவணன், மற்றும் சந்தோஷ்குமாரை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில், கைது செய்ய கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். இதற்கான ஆணை சேலம் மத்திய சிறையில், அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் அதிகாரிகள் வழங்கினர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்