கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. S. அரவிந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்வின் போது மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து அலுவலகப் பணிகள், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவரம், மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள காவல் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் நேர்மையாகவும், விரைவாகவும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
















