திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் , பழனியில் ஆயுதபூஜை சிறப்பு நிகழ்வாக மத நல்லிணக்கம் நிகழ்ச்சி. பழனி நகராட்சியில் மழைகாலத்தை கருத்தில் கொண்டு நோய் தடுப்பு தீவிர களப்பணியில் சிறப்பாக பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை வாழ்த்தி பாராட்டி உணவு வழங்கும் நிகழ்வு இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வாழ்த்திய உயர் திரு ராஜாமுகமது அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் அவர்கள், சமூக ஆர்வலர் முத்தமிழ் கவிஞர் வை.வைரபாரதி அவர்கள், மற்றும் நிகழ்வை ஊக்கம் தரும் வகையில் பழனி போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திருமதி கவிதா, உயர்திரு தியாகராஜன் அவர்கள்,பழனி நகராட்சி களப்பணி உதவியாளர் நாகராஜன் அவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு களப்பணியாளர்களை வாழ்த்தி உணவு வழங்கி பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி