விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் மற்றும் ஆர்.சி.பி.டி.எஸ். தொண்டு நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் ஜான் தேவவரம் நினைவு அறக்கட்டளை சார்பாக, அவரது ஆறாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடை பெற்றது. கூட்டத்தில், ஏழை குழந்தைகளுக்கு உயர்கல்வி பயில நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உயர் கல்வி பயிலும் ஆறு குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்வில், ஜான் தேவவரம் நினைவு அறகட்டளை அறங்காவலர்கள் த.பொற்கொடி தேவவரம், ராஜாசிங் குடும்பத்தினர், ஸ்பீச் இயக்குனர் அமுதன், நிதி இயக்குனர் .செல்வம், மக்கள் தொடர்பு மேலாளர் பிச்சை, நிர்வாக குழு உறுப்பினர் .கங்கா, ஆர்.சி.பி.டி.எஸ். மேலாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி