திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் பெற்றோரை கைப்பேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒருவர் தன்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டு அம்மாணவியின் பெயர், வகுப்பு விவரங்களை சரியாக கூறி தங்கள் மகளுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகக் பெற்றோரிடம் இருந்து வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.78 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மோசடி செய்துள்ளனர். அதே போல மாநகரில் பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட மொத்தமாக 4 மாணவர், மாணவிகளின் பெற்றோர்களிடம் ரூ.1,88,000-த்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கல்வி உதவித்தொகை என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளது. இது போல் நடைபெறும் மோசடிகளில் மாணவர், மாணவிகளின் பெற்றோர்கள் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க மாநகர சைபர் கிரைம் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. சைபர் குற்றங்கள் நடைபெற்றால் அது தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா எண் அல்லது இணையதளம் வாயிலாகவோ தொடர்பு கொண்டு புகாா்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















