திண்டுக்கல்: திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்த பாண்டி(40). இவர் நள்ளிரவு வேடப்பட்டி சுடுகாடு அருகே நண்பர்களுடன் மது அருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் பாண்டியை பாட்டிலால் தாக்கியும் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.
இது குறித்து திண்டுக்கல் நகர் ASP.சிபின் தலைமையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தண்டபாணி, கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்தக் கொலையில் தொடர்புடைய மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா