திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல்துறையினர் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மேலப் பிள்ளையார் குளம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு மானூர் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதை பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், மாணவர்களுடைய அறியாமையாலும் தவறான நட்பு போன்ற காரணங்களாலும் போதை பழக்கம் ஏற்படுகிறது, எனவும் அவை சமுதாயத்திற்கும் உடலுக்கும் அழிவை தரக்கூடியது, எனவே போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் சூழலை தவிர்த்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெண்கள் பாதுகாப்பு இலவச எண்களான 181 மற்றும் காவலன் SOS குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்