தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக ‘ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி (10.03.2025) வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தீபு தலைமையில், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சமூக ஒற்றுமை, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் திரு. பென்னடிக் ஆசீர், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜமால் மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியில் ஆய்வாளர் திருமதி. முத்துமாரி, வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் திரு. பீட்டர் தேவதாஸ் உட்பட கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.