திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ், உதவி ஆய்வாளர் அவர்கள்,உதவி ஆய்வாளர் திரு. ராஜரத்தினம், அவர்கள் பாளை தூய சவேரியார் கல்லூரிக்கு நேரில் சென்று மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அப்போது காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் அவர்கள் பேசுகையில், முகநூல் பக்கத்தில் ஏற்படும் குற்றங்கள் அதிகமாக ஏற்படத் தொடங்கியுள்ளது, முன்பின் தெரியாத முகம் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், முதலில் அன்பாக பேசுவதுபோல் பேசி காதல் வலையில் வீழ்த்தி ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சேமித்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டி பண மோசடியில் ஈடுபடும் கும்பல் முகநூலில் அதிகமாக சுற்றித்திரிகிறது.
முன்பின் தெரியாத நபர்கள் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி, முதலில் சிறிய தொகை கட்டினால் போதும் உங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றுவார்கள், நம்பி ஏமாற வேண்டாம்
வங்கியில் இருந்து பேசுவது போல் பேசி உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் லோன் பெற்றுக்கொள்ளலாம், அதற்கு உங்கள் வங்கி கணக்கு குறித்த குறிப்பு அல்லது சிறிய தொகையை முதலில் கட்ட வேண்டும் என கூறினால் ஏமாற வேண்டாம்.
தேவையில்லாத ஆபாசமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யவோ பதிவிடவோ செய்வது சட்டப்படி குற்றமாகும்.
மாணவ-மாணவிகள் ஆகிய நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம், தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ, பகிரவோ வேண்டாம், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து உங்கள் பெற்றோரிடம் எடுத்துக் கூறுங்கள், எனவும் சைபர்கிரைம் புகார்களுக்கு 1930 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும்
விழிப்புடன் இருங்கள் என மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.