திண்டுக்கல்: திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா மற்றும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விக்டோரியா லூர்துமேரி மற்றும் காவலர்கள் பொன்னகரம் அருகே ராமபிரபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகளின் திருமண வயது பற்றியும், போக்சோ சட்டத்தை பற்றியும், பாலியல் தொந்தரவு மற்றும் இணையவழி குற்றங்கள் பற்றியும் அதற்கு உதவிடும் இலவச தொலைபேசி எண்கள் 1098,181,1930 பற்றியும் விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா