திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில், பேராசிரியர்களான செபஸ்டியான் ரோமி ( 38). பால்ராஜ் (40). இருவரும் தனியார் விடுதி ஒன்றில் இரவு மது அருந்தி கொண்டிருக்கும் பொழுது அதே கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவியை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, ஆபாசமாக பேசி,மது அருந்த அழைத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக, அந்த மாணவியின் பெற்றோா் காவல்துறையில் புகார் அளித்தனா். இது குறித்து மாநகர காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா, இ.கா.ப., உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பேராசிரியா்கள் செபஸ்டியான் ரோமி, பால்ராஜ் ஆகியோா் மாணவியிடம் ஆபாசமாக பேசி மது அருந்த அழைத்தது உறுதியானது. இதையடுத்து பேராசிரியா்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, பாளையங்கோட்டை மற்றும் தனிப்படை போலீசார், செபஸ்டியான் ரோமியை சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனா். தலைமறைவான மற்றொரு பேராசிரியரான பால்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்