திண்டுக்கல்: திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஏ.டி.எஸ்.பி தெய்வம் தலைமை தாங்கினார்.இதில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா