திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பமாக (10.10.2024) அன்று மாவட்ட காவல் நிலையங்களில் போலீஸ் அக்கா திட்டத்தில் நியமிக்கப்பட்ட பெண் காவலர்கள் 54 கல்லூரிகளுக்கு சென்று கலந்துரையாடல் நடத்தினர்.
அக்கலந்துரையாடலின் போது மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தெரியப்படுத்தும் விதமாக போலீஸ் அக்கா திட்டத்தின் தொலைபேசி எண்ணை மாணவிகளுக்கு கொடுத்து அதன் முக்கியத்துவம் குறித்தும், மாணவிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும், புகாரி பேரில் துரித விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. எந்த தயக்கமும் இன்றி மாணவிகள் தகவல்களை தெரிவிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்