திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி 09.12.2021 இன்று மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சங்கு அவர்களின் தலைமையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு. ராஜ், உதவி ஆய்வாளர் திரு. ராஜரத்தினம் ஆகியோர் அடங்கிய சைபர் கிரைம் காவல்துறையினர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கு, அவர்கள் பேசுகையில், முகநூல் பக்கத்தில் ஏற்படும் குற்றங்கள் அதிகமாக ஏற்பட தொடங்கியுள்ளது.
முன்பின் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் முதலில் அன்பாகப் பேசுவது போல் பேசி காதலிப்பதாக ஏமாற்றி ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சேகரித்து வைத்துக் கொண்டு அதை வைத்து மிரட்டி பணம் மோசடியில் ஈடுபடும் கும்பல் முகநூலில் அதிகமாக சுற்றித் திரிகின்றனர்.
இதில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வது பற்றியும், சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும்,
சமூக வலைதளங்களில் தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டாம் என்றும், சமூக வலைத்தளத்தின் முலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது பற்றியும், சமூக வலைதளம் மூலம் வேலைவாய்ப்பு மோசடி மற்றும் மின் வணிக தளங்களின் மூலம் ஏற்படும் நிதி மோசடி பற்றியும்,
சைபர் கிரைம் காவல்துறையினரின் இலவச எண் 155260 பயன்படுத்துவது பற்றியும் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கு, அவர்கள் சைபர் கிரைம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக பெண்கள் பாதுகாப்பு உதவி எண் 181, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணான 1098 ஆகிய எண்ணிற்கு தகவல் அளிக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.