திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அனாஸ் அலி 22. இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பயங்கரவாத அமைப்புகளுடன், முக்கியமாக வெளிநாடுகளில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக பதிவுகளை போட்டு வந்ததுடன், தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வரும் சிரியா, மொராக்கோ என பல நாடுகளில் பலருடன் தொடர்பில் இருந்ததால் மத்திய உளவுத்துறை போலீசார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட போலீசார் இணைந்து அனாஸ் அலியின்வீட்டில் சோதனை செய்தனர். செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, அனாஸ் அலி மீது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக ஊடகங்களில் செயல்பட்டது, தேச விரோத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது என 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பந்தமாக பல்வேறு மாவட்டங்களில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அனாஸ் அலியின் வீட்டில் மீண்டும் சந்தேகத்தின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திரு.புஷ்பராஜ் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு,சரவணன் ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் எந்தவித தடயமும் கிடைக்காததால் போலீசார் திரும்பி சென்றனர்.