திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே சாட்டான்குப்பம் பகுதியில் கடலில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சின்ன மாத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் யோகேஷ் கடல் அலையில் சிக்கி மாயமானார். சிறிது நேரத்தில் அலையில் சிக்கிய யோகேஷை நண்பர்கள் மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து திருப்பாலைவனம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு