திருவள்ளூர்: பொன்னேரியில் இயங்கி வரும் உலக நாதா நாராயணசாமி அரசு கல்லூரியில்
4000 க்கும்மேற்பட்ட மாணவர்கள் அதிக அளவில் படிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த கல்லூரிக்கு வரும் மாணவர்கள் சரியான முறையில் முடியை வெட்டுவதில்லை பார்ப்பதற்கு மோசமாக காட்சி அளிக்கும் சிகை அலங்காரத்தை செய்து கொண்டு காதில் கம்மல். அவர்கள் ஓட்டி வரும் இரு சக்கர வாகனத்திற்கு லைசன்ஸ் இல்லை இப்படி பல புகார்கள் காவல்துறைக்கு வந்ததன் காரணமாக காவல்துறை உதவி ஆணையர் சபாபதி தலைமையில் மாணவர்களுக்கு அறிவுரைவழங்கபட்டது. கம்பல் அணிந்து வந்த மாணவர்களை பார்த்து கம்பலை கழட்ட சொல்லி லைசன்ஸ் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை எடுத்து வரும் மாணவர்களின் இரு சக்கர வாகன சாவியை கைப்பற்றி அதை கல்லூரி முதல்வர் இடத்தில் ஒப்படைத்து கல்லூரி முடித்த பின் கடிதம் எழுதி கொடுத்து எடுத்துச் செல்லும் படியும் தலை முடியை நன்றாகவும் வெட்டிக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டது.
மேலும் இனிவரும் காலங்களில் நல்ல முறையில் முடியை வெட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்திற்கு லைசன்ஸ் வாங்கிக்கொண்டு நல்ல எண்ணத்தில் கல்லூரிக்கு படிப்பதற்கு வர வேண்டும் என்று அனைத்து மாணவர்களுக்கும் காவல்துறை உதவி ஆணையர் சபாபதி அறிவுரை வழங்கினார். அப்போது காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு