மதுரை : உசிலம்பட்டி அருகே பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரியும், துறை தலைவர் மற்றும் முதல்வர் பணியிடங்களை முறைப்படுத்த கோரியும், பணி மாறுதல் கலந்தாய்வை ஆண்டு தோறும் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பணியாற்றும் 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து வந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், துறை தலைவர் மற்றும் முதல்வர் பணியிடங்களை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கமாக கோசங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி