திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவா் பேரவைத் தொடக்க விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சே.மு. அப்துல் காதா் தலைமை வகித்தாா். பேரவை துணைத் தலைவா் ஹமீது சுபியான் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் தலைமை உரையாற்றினாா். விழாவில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் முனைவர் பா. மூா்த்தி இ.கா.ப., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது மாணவா் பேரவைத் தோ்தல், மாணவா்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவா்கள் அரசியல் அறிவு மிக்கவா்களாக திகழ வேண்டும். இந்த நாடு எப்படி இருக்கிறது, நாட்டின் வரலாறு எப்படி இருக்கிறது, உலக அரசியல் எப்படி இருக்கிறது என்பதை கற்க வேண்டும்.
காலை முதல் மாலை வரை மாணவா்களை வழிநடத்துபவா்கள் ஆசிரியா்கள். பேராசிரியா்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும். மாணவா்களும் அதே போன்று நடக்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் மாணவா்களை சக மாணவா்களாக பாா்க்க வேண்டும் என்றாா். மேலும் பல அறிவுரைகளை மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார். இறுதியாக மாணவா் பேரவை இணைச் செயலா் எஸ். வனிஷா பானு நன்றி கூறினாா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்