திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.பா., உத்தரவின்படி காவல் துணை ஆணையர்கள், G.S.அனிதா,(தலைமையிடம்) V.கீதா, (மேற்கு) S.விஜயகுமார், (கிழக்கு) ஆகியோர் வழிகாட்டுதல் படி திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், அந்தோணி ஜெகதா, தலைமையில் (18.22.2024) பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் பெண்களுக்கான போலீஸ் அக்கா திட்டம் மூலம் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளிடம் அவர் சைபர் குற்றங்களில் இருந்தும், இணையதள மூலம் நடைபெறும் குற்றங்களிலிருந்தும் தற்காத்துக் கொள்வது பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் பொழுது துணிவுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்