சிவகங்கை: ஶ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் போதை த் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி டீன் .முனைவர்.M.சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தரும் கல்லூரியின் ஆலோசகருமான முனைவர்.சொ.சுப்பையா தலைமை வகித்தார். .அவரது உரையில் மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றும் இதனால் வாழ்க்கை சீர் கெட்டுவிடும் என்றும் கூறினார். சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த R.ரெங்கநாதன் உதவி ஆணையர் ஆயத்தீர்வை சிவகங்கை தனது உரையில் மாணவர்கள் நல்ல பழக்கவழக்கங்களை கற்க வேண்டும். எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.
கோட்ட ஆய அலுவலர் A.கந்தசாமி தனது உரையில் போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்க ப்பட வேண்டும்.என்று கூறினார். போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் அருண் முரளி மாணவர்கள் எந்த போதை ப் பழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாது என்று கூறினார். பேராசிரியை .ஷீபா உறுதி மொழி வழங்கினார். பேச்சுப் போட்டியில் பரிசு பெற்ற பொறியியல் மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்கு கல்விக் குழும ஆலோசகர் பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி வட்டாட்சியர் P. தங்கமணி சோமநாத புரம் காவல் உதவி ஆய்வாளர் பிரணிதா, வருவாய் ஆய்வாளர் , கிராம நிர்வாக அலுவலர் , ஆயத்தீர்வைப் பிரிவு பணியாளர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் கல்லூரி தொடர்பு அலுவலர் கி.ஏகோஜிராவ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பேரா P.கீதா.பேரா, N. பிரியா ஆகியோர் செய்திருந்தனர். பேரா. ராஜ கீர்த்தனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி