திண்டுக்கல்: தாழையூத்து சுப்பிரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து சுப்பிரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய அறிவியல் தின விழா மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர். சுப்பையா, காவல்துறை ஆய்வாளர். தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து துறை சார்ந்த அறிவியல் தின கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர். உடன் கல்லூரி தாளாளர் சுப்பிரமணி, ஜெயலட்சுமி கல்லூரி முதன்மை கல்வி அதிகாரி. ஸ்வேதா சுப்பிரமணி, ஆகியோர் தலைமை வகித்து தலைமை உரை ஆற்றினர். கல்லூரி முதல்வர் முனைவர். பிரபாகரன் மற்றும் தமிழ் துறை தலைவர் முனைவர் க. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். கணிப்பொறித் துறை தலைவர் சத்யா வரவேற்புரை ஆற்றினார். 100க்கும் மேற்பட்ட அறிவியல் செய்முறை விளக்க கண்காட்சி விழாவில் இடம் பெற்று உள்ளது. விழா ஏற்பாடுகளை அனைத்து அறிவியல் துறை ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா