கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மதுபோதை ஒழிப்பு மறுவாழ்வு மையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக கடலூர் சி. கே. பொறியியல் கல்லூரியில் “புதிய பாதை” நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. V. ரகுபதி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சார்லஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
















