திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி,சார்பு ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் காவலர்கள் சார்பில் திண்டுக்கல் R.V.S பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகளிடம் சைபர் கிரைம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு I930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும் இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படியும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா