சிவகங்கை: டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சிவகங்கை மாவட்ட சாலைப் பாதுகாப்புப் படை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரியின் நுழைவாயிலில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹேமமாலினி கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் T. பார்த்திபன் அவர்கள், காரைக்குடி போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் P.S.பாஸ்கர் அவர்கள், சிவகங்கை மாவட்ட சாலைப் பாதுகாப்புப் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ.பிரகாஷ்மணிமாறன் அவர்கள், காரைக்குடி போக்குவரத்து காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாடசாமி அவர்கள், அழகப்பாபுரம் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் சரவணகுமார் அவர்கள் கலந்து கொண்டனர் .பொது மக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு சின்னங்களை காண்பித்து வினா எழுப்பி பரிசுகள் வழங்கப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் மா.ஜோதிமுத்து மற்றும் திருமதி சிலம்புச்செல்வி மற்றும் முனைவர் இரா.பிரபாவதி இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி