மதுரை: திருவேடகம் விவேகானந்த கல்லூரி அகத்தர உறுதி மையத்தின் சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம் “செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை கற்றல்,கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் எவ்வாறு பயன்படுத்துவது” என்ற பொருண்மையில் நடைபெற்றது. அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.சதீஷ்பாபு வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த மற்றும் துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்விப்புலத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் பி.முத்துப்பாண்டி சிறப்புரையாற்றினார். விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆர்.முத்துப்பாண்டி நன்றி கூறினார். வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் திரு எம்.ரகு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனுற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி